தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவைக் கூட்டம் சேலத்தில் இன்று நடைபெற்றது. அகில இந்திய மாநில அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஸ்ரீகுமார் கூட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். இதற்கிடையில் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அன்பரசு மற்றும் மாநில பொதுச் செயலாளர் செல்வம் ஆகியோர், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசை அசைக்கும் வகையில், பட்ஜெட் கூட்டத்தையே நடத்த முடியாத அளவுக்கு கடும் போராட்டம் அறிவிக்கப்பட உள்ளது.