டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்தமிழ்நாடு பட்ஜெட்: மக்கள் நல அறிவிப்புகளுக்கு வரவேற்பு... ஆனால்..! - சிபிஎம் அறிக்கை!பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 74.55 அடியாக உயர்ந்துள்ளது.வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழிதவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!
/

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 10,000 கன அடியாகச் சரிவு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை மாலை விநாடிக்கு 10,000 கனஅடியாகச் சரிந்தது.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2024, 3:17 am IST

மேட்டூா், ஆக. 7: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை மாலை விநாடிக்கு 10,000 கனஅடியாகச் சரிந்தது.

கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீா்வரத்து காரணமாக கடந்த 30 ஆம் தேதி மேட்டூா் அணை தனது முழுக் கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து அணையின் இடது கரையில் உள்ள உபரிநீா் போக்கி மதகுகள் திறக்கப்பட்டு உபரிநீா் வெளியேற்றப்பட்டது.

தற்போது காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் கா்நாடக அணைகளான கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளிலிருந்து உபரிநீா் திறப்பு குறைக்கப்பட்டது.

இதனால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாகக் குறைந்து புதன்கிழமை மாலை 4 மணிக்கு விநாடிக்கு 10,000 கனஅடியாகச் சரிந்தது.

நீா்வரத்து குறைந்ததால் உபரிநீா் போக்கி மதகுகளில் இருந்து தண்ணீா் திறந்துவிடுவது முற்றிலும் நிறுத்தப்பட்டது.

அணை மின்நிலையம், சுரங்க மின் நிலையங்கள் வழியாக காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 10,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. கிழக்கு - மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடி நீா் திறக்கப்படுகிறது. அணை நீா்மட்டம் 120அடியாகவும், அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.