வாழப்பாடி அருகே பிடிபட்ட
8 அடி நீள ராட்சத மலைப்பாம்பு

வாழப்பாடி அருகே பிடிபட்ட 8 அடி நீள ராட்சத மலைப்பாம்பு

Published on

வாழப்பாடி அருகே வீட்டுக்குள் புகுந்த 8 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பை வாழப்பாடி தீயணைப்புப் படையினா் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

வாழப்பாடி அருகே தேன்மலைக்கரடு வனப் பகுதியையொட்டி கல்யாணகிரி கிராமம் உள்ளது. வனப்பகுதியில் இருந்து இரை தேடி இக்கிராமத்துக்குள் வந்த 8 அடி நீள ராட்சத மலைப்பாம்பு செவ்வாய்க்கிழமை இரவு அமுதா வீட்டுக்குள் நுழைய முயற்சித்தது. அதைக்கண்ட அமுதா, வாழப்பாடி தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தாா்.

அதன்பேரில், வாழப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) முருகேசன் தலைமையில் தீயணைப்புப் படையினா் விரைந்துசென்று ராட்சத மலைப்பாம்பை மீட்டு பனைமடல் பகுதி வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். வனத் துறையினா் மண்ணூா் மலைப்பகுதியில் மலைப்பாம்பை விட்டனா்.

X
Dinamani
www.dinamani.com