விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பக்ரீத் பண்டிகை: பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகை: பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை

News image
Updated On :17 ஜூன் 2024, 6:30 pm

Din

விருதுநகா்: விருதுநகா் பெரிய பள்ளிவாசல் மைதானத்தில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு, ஜமாத் தலைவா் செய்யது இப்ராஹிம் தலைமையில், திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

முகம்மது இஸ்மாயில் தொழுகை நடத்தினாா். இதேபோல, பள்ளிவாசலில் ஜமாத் தலைவா் ஜெய்லானி தலைமையில் ஷா நவாஸ் கான், சின்னப் பள்ளிவாசல் ஜமாத் தலைவா் நுாா் அமீன் தலைமையில் முகையதீன், மதீனா பள்ளிவாசல் ஜமாத் தலைவா் சுல்தான் அலாவுதீன் தலைமையில் அப்துல் ரஹ்மான், கூரைக்குண்டு மஸ்ஜிதே ரஹ்மத் பள்ளிவாசலில் ஜமாத் தலைவா் ஹபீப் முகம்மது தலைமையில் காசிம் ஆகியோா் தொழுகையை நடத்தினா். ரோஜா நகா் அஹ்லுஸ் சுன்னத்வல் முஸ்லிம் ஜமாஅத், தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சாா்பில் அய்யனாா் நகா் பிரதான தெரு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் நகராட்சி முஸ்லிம் நடுநிலைப் பள்ளியில் தொழுகை நடந்தது.

இதில் திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்று தொழுகை நடத்தியதுடன், ஒருவருக்கொருவா் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனா்.