/

கொடைக்கானலில் வீசிய பலத்த காற்றால் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை வீசிய பலத்த காற்றால் மலைச் சாலையில் மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
Updated On :28 நவம்பர் 2025, 9:40 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை வீசிய பலத்த காற்றால் மலைச் சாலையில் மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானலில் கடந்த 5 நாள்களாக மழை பெய்ய வில்லை. ஆனால் பலத்த காற்று வீசுகிறது. இந்த நிலையில், கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச்சாலையான குருசடி அருகே மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்தப் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினரும், நெடுஞ்சாலைத் துறையினரும் அந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதையடுத்து போக்குவரத்து சீரானது. இதனிடையே கொடைக்கானல் மலைச் சாலையில் முறிந்து விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.