சுவாமி விமலானந்தர் ஆராதனை விழா

 சுவாமி சிவானந்தரின் சீடர்களில் ஒருவரும், மதுரை சிவானந்த தபோவனம்,சென்னை சிவானந்தா பவுண்டேசன் நிறுவனரும், மதுரை தெய்வநெறிக் கழக முன்னாள் தலைவருமான சுவாமி விமலானந்தரின் 12-வது ஆராதனை விழா ஜன. 11 ஆம் தேதி தோப்பூர் சிவானந்த தபோவனத்தில் நடைபெற உள்ளது.
Updated on
1 min read

 இதுகுறித்து தபோவனத் தலைவர் சுவாமி சுந்தரானந்தா கூறியது:

 ஜன.11 ஆம் தேதி சுவாமி விமலானந்தரின் ஆராதனை விழா, தோப்பூர் தபோவனத்தில்  நடைபெறும்.   விழாவில் குருதேவரின் வெள்ளி பாதுகைக்கு சிறப்பு பூஜையும்,சிவானந்தரின் ஆங்கில நூல்களில் விமலானந்தரால் தமிழாக்கம் செய்யப்பட்ட 12 நூல்கள் வெளியீட்டு விழா நடைபெறும். விழாவில் "இமயகீதம்' ஆசிரியர் சுவாமி ஸ்வரூபானந்தர்,திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவன துணைத் தலைவர் ஸ்ரீமத் சுவாமி பரமானந்தர் பல்வேறு ஆசிரமங்களைச் சேர்ந்த துறவிகள் மற்றும் சாதுக்கள் கலந்து கொள்கின்றனர்.

 இதில் அனைவரும் கலந்துகொண்டு குருவருள் பெற வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com