நூபுரகங்கையில் கள்ளழகருக்கு தைலக் காப்பு
அழகர்கோவில் மலைமீதுள்ள நூபுரகங்கை தீர்த்தத்தில், கள்ளழகர் என பக்தர்களால் அழைக்கப்படும் சுந்தரராஜப் பெருமாளுக்கு தைலக் காப்பு தீர்த்தவாரி புதன்கிழமை நடைபெற்றது.


அழகர்கோவில் மலைமீதுள்ள நூபுரகங்கை தீர்த்தத்தில், கள்ளழகர் என பக்தர்களால் அழைக்கப்படும் சுந்தரராஜப் பெருமாளுக்கு தைலக் காப்பு தீர்த்தவாரி புதன்கிழமை நடைபெற்றது.
ஐப்பசி மாதத்தில் சுந்தரராஜப் பெருமாள் அழகர்மலை மீதுள்ள அருள்மிகு ராக்காயி அம்மன் திருக்கோயிலுக்கு எழுந்தருள்வது வழக்கம். தைலக் காப்புத் திருவிழா கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி தொடங்கியது. நவநீதகிருஷ்ணர் சன்னதியில் பெருமாள் பரமபதநாதனாகவும், 31-ஆம் தேதி சீராப்திநாதனாகவும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புதன்கிழமை காலை, திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கிருந்து கல்யாணசுந்தரவல்லி யானை முன்செல்ல, பல்லக்கில் மலைக்குப் புறப்பட்டார். பெருமாள் மலைக்குப் புறப்பட்டு சிறிதுநேரத்தில் மழைபெய்தது. ராக்காயி அம்மன் கோயிலில் மாதவி மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளினார். அங்கு, பெருமாளுக்கு சந்தனாதி, சம்பங்கி உள்ளிட்ட திருத்தைலங்கள் சாத்தப்பட்டது. பின்னர், நூபுரகங்கை தீர்த்தத்தில் நீண்டநேரம் தீர்த்தவாரி நடைபெற்றது. மீண்டும், மாதவி மண்டபத்தில் எழுந்தருளிய பெருமாள், சர்வஅலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியருளினார்.
மாலையில், பல்லக்கில் மலையடிவாரத்திலுள்ள கோயிலுக்குத் திரும்பினார். முன்னதாக, மலைக்கு வந்த பெருமாளுக்கு கருட தீர்த்தத்திலும், அனுமன் தீர்த்தத்திலும் வரவேற்பளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை, கோயில் தக்கார் வி.ஆர். வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...