மூன்று சக்கர சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
மதுரை அருகே மூன்று சக்கர சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை இறந்தார்.


மதுரை அருகே மூன்று சக்கர சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை இறந்தார்.
மதுரை அருகே உள்ள சக்கிமங்கலம் நரிக்குறவர் பொட்டலைச் சேர்ந்தவர் காளிமுத்து(45). கூலித்தொழிலாளியான காளிமுத்து தனது உறவினர் இறந்த துக்க நிகழ்வுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து மூன்று சக்கர சைக்கிளில் வீடு திரும்பியுள்ளார். சிலைமான் அருகே உள்ள புவனேஸ்வரி காலனி பகுதியில் வந்தபோது எதிர்பாராவிதமாக டிரை சைக்கிளில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த காளிமுத்துவை உறவினர்கள் மீட்டு அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு காளிமுத்துவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக காளிமுத்து மனைவி தாயம்மாள் அளித்தப்புகாரின்பேரில் சிலைமான் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...