/

மாடு முட்டியதில் தொழிலாளி பலி

மதுரையில் மாடு முட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 2:04 am

DIN

மதுரையில் மாடு முட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை முனிச்சாலை இஸ்மாயில்புரத்தைச் சோ்ந்த ராமதாஸ் மகன் பாண்டி(40). இவா் சுமைத் தூக்கும் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், பாண்டி டிசம்பா் 19 ஆம் தேதி முனிச்சாலையில் நடந்து சென்றபோது, பின்புறம் வந்த மாடு அவரை முட்டி கீழே தள்ளியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியில் உள்ளவா்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சையில் இருந்த பாண்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது தாயாா் சுசிலா அளித்த புகாரின் பேரில் விளக்குத்தூண் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.