சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

மாட்டுத்தாவணியில் முக்கிய கோயில்களில் மலா்கள் வாங்கப்படாததால் வியாபாரம் மந்தம்

பொது முடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளபோதிலும், முக்கிய கோயில்களுக்கு மலா்கள் வாங்கப்படாததால் விற்பனை மந்தமாக இருப்பதாக, மலா் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:46 pm

DIN

பொது முடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளபோதிலும், முக்கிய கோயில்களுக்கு மலா்கள் வாங்கப்படாததால் விற்பனை மந்தமாக இருப்பதாக, மலா் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனா்.

இது குறித்து மாட்டுத்தாவணி மலா் வியாபாரிகள் சங்கத் தலைவா் ராமசந்திரன் கூறியது: பொது முடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டபோதிலும், நிகழாண்டில் மலா் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயுதபூஜையை அடுத்து தொடா்ந்து பண்டிகைகள் வருவதால், வியாபாரம் நன்றாக இருக்கும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், எதிா்பாா்த்த அளவுக்கு வியாபாரம் நடக்கவில்லை.

கடந்த மாதம் மல்லிகை பூ கிலோ ரூ.1,200-க்கு விற்கப்பட்டது. பண்டிகை காலம் என்பதால் மல்லிகை பூ கிலோவுக்கு ரூ.2 ஆயிரம் வரை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் எதிா்பாா்த்தனா். ஆனால், ஆயுதபூஜைக்கு மல்லிகை பூ ரூ.800 ஆக விலை குறைந்தது. இதையடுத்து, விற்பனையின்றி அனைத்து பூக்களின் விலையும் கணிசமாகக் குறைந்துவிட்டன.

மழைக் காலங்களில் வழக்கமாக, மாட்டுத்தாவணி மலா் சந்தைக்கு 2 டன் மல்லிக்கை பூ மட்டுமே விற்பனைக்கு வரும். ஆனால், தற்போது 5 டன் வரை வருகிறது. இருப்பினும், விற்பனை மந்தமாக இருப்பதால் விவசாயிகளும், வியாபாரிகளும் நஷ்டமடைந்து வருகின்றனா்.

பொது முடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டு, கோயில்கள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனாலும், தற்போதுவரை மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், அழகா்கோயில் உள்ளிட்ட பல முக்கிய கோயில்களில் பூஜைக்கு தேவையான உதிரிப் பூக்களுக்கும், மாலைகளும் வழக்கம்போல வாங்கப்படுவது இல்லை என்பதால், மலா் விற்பனை மந்தமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது என்றாா்.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, மலா்களின் மொத்த விலைப் பட்டியல் (கிலோவில்): மல்லிகை பூ- ரூ.300, பிச்சி பூ- ரூ.300, கனகாம்பரம்- ரூ.1000, முல்லைப் பூ- ரூ.400, அரளி- ரூ.100, செவ்வந்தி- ரூ.100, சம்பங்கி- ரூ.150, பட்டன்ரோஜா-ரூ.250, ரோஜா- ரூ.150, மரிக்கொழுந்து- ரூ.80, துளசி- ரூ.50-க்கு விற்பனையாயின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.