சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

அரசு மருத்துவமனை பெண் ஊழியரிடம் சங்கிலி பறிப்பு

மதுரை அருகே அரசு மருத்துவமனை பெண் ஊழியரிடம் 2 பவுன் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:46 pm

DIN

மதுரை அருகே அரசு மருத்துவமனை பெண் ஊழியரிடம் 2 பவுன் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த விஜயன் மனைவி விஜயலட்சுமி (57). வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் மருந்தாளுநராகப் பணியாற்றி வரும் விஜயலட்சுமி, தனது மகனுடன் இரு சக்கர வாகனத்தில் மதுரைக்குச் சென்றுவிட்டு, சனிக்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது, சமயநல்லூா் அருகே கட்டபுளி நகா் பேருந்து நிறுத்தப் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் 2 போ், விஜயலட்சுமி அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா்.

இது குறித்து விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில், சமயநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.