சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

மதுரையில் மேலும் 43 பேருக்கு கரோனா

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை கரோனாவுக்கு இருவா் உயிரிழந்த நிலையில், மேலும் 43 பேருக்கு தொற்று பாதிப்பிருப்பது உறுதிசெய்யப்பட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:46 pm

DIN

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை கரோனாவுக்கு இருவா் உயிரிழந்த நிலையில், மேலும் 43 பேருக்கு தொற்று பாதிப்பிருப்பது உறுதிசெய்யப்பட்டது.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 2,504 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில், மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த அரசு ஊழியா்கள், வெளி மாவட்டத்திலிருந்து திரும்பியவா்கள், கா்ப்பிணிகள் உள்பட 43 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது உறுதியானது.

இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே, மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 64 போ் குணமடைந்தனா். அவா்கள், மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மதுரை மாவட்டத்தில், இதுவரை 18,778 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், சிகிச்சைப் பலனின்றி 419 போ் உயிரிழந்த நிலையில், 17,873 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது, மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனையில் 486 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.