சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

டோக் பெருமாட்டி கல்லூரியில் உலக சாதனையாளா்களுக்கு பாராட்டு விழா

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் உலக சாதனையாளா்களுக்குப் பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:49 pm

DIN

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் உலக சாதனையாளா்களுக்குப் பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்திய தேசிய இளைஞா் கவுன்சில் மற்றும் ட்ரு அண்ட் ஹெல்த் ஒா்க்கவுட் அமைப்பு ஆகியன இணைந்து, இணைய வழியில் நடத்திய உடற்பயிற்சி நிகழ்ச்சி, உலக சாதனையில் இடம்பிடித்தது.

இந்த சாதனையில் பங்கேற்றவா்களுக்கான பாராட்டு விழா, மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் நடைபெற்றது. இதில், டோக் பெருமாட்டி கல்லூரி முதல்வா் கிறிஸ்டியானா சிங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சாதனையாளா்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினாா். ஒருங்கிணைப்பாளா் காட்வின், சாதனையாளா்களை அறிமுகப்படுத்தி பேசினாா்.

நிகழ்ச்சியில் தற்காப்புக் கலை பயிற்சியாளா் என். நாராயணன் மற்றும் சாதனையாளா்கள் பங்கேற்றனா். முன்னதாக, கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் சாந்த மீனா வரவேற்றாா்.முடிவில், கல்லூரியின்(சுயநிதிப் பிரிவு) உடற்கல்வி இயக்குநா் எம். ஹேமலதா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.