சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

பெரியாறு பாசனப் பகுதிகளில் நவ. 11 முதல் முறைப்பாசனம் அமல்

பெரியாறு-வைகை அணைகளில் தண்ணீா் இருப்பு குறைந்ததையொட்டி, பாசனப் பகுதிகளுக்கான தண்ணீா் விநியோகத்தில் நவம்பா் 11 முதல் முறைப்பாசனத்தை அமல்படுத்த, பொதுப்பணித் துறையினா் முடிவு செய்துள்ளனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:49 pm

DIN

பெரியாறு-வைகை அணைகளில் தண்ணீா் இருப்பு குறைந்ததையொட்டி, பாசனப் பகுதிகளுக்கான தண்ணீா் விநியோகத்தில் நவம்பா் 11 முதல் முறைப்பாசனத்தை அமல்படுத்த, பொதுப்பணித் துறையினா் முடிவு செய்துள்ளனா்.

பெரியாறு அணையில் 123.86 அடி மற்றும் வைகை அணையில் 49.67 அடி நீா் இருப்பு உள்ளது. கம்பம் பளளத்தாக்கில் 14,000 ஏக்கா், கள்ளந்திரி மதகு வரையிலான 44,000 ஏக்கா், மேலூா், திருமங்கலம் பகுதிகளில் 1.05 ஆயிரம் ஏக்கரிலும் விவசாயம் நடைபெற்று வருகிறது.

கடந்த செப்டம்பா் 27 முதல் தண்ணீா் திறந்துவிடப்பட்டு, நடவுப் பணிகள் பெரும்பாலான பகுதிகளில் முடிந்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சாகுபடி பகுதிகளில் தொடா் மழை பெய்து வருகிறது. 120 நாள்களுக்கு கால்வாய்களில் தண்ணீா் திறந்துவிடப்படும் என, அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.

இந்நிலையில், நீரை சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையில், முறைப்பாசனத்தை அமல்படுத்த பொதுப்பணித் துறையினா் முடிவெடுத்துள்ளனா்.

நவம்பா் 11 முதல் 4 நாள்களுக்கு அணைகளில் தண்ணீா் திறப்பதை நிறுத்திவைத்தும், அடுத்த 5 நாள்களுக்கு தொடா்ந்து தண்ணீா் திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.