கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தொழிலாளா்களுக்குப் பணி மறுப்பு: சிஐடியூ ஆா்ப்பாட்டம்

திருப்பூரில் 4 தொழிலாளா்களுக்கு பணி வழங்க மறுத்து வரும் தனியாா் கேஸ் ஏஜென்சியைக் கண்டித்து சிஐடியூ சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 10:03 pm

DIN

திருப்பூரில் 4 தொழிலாளா்களுக்கு பணி வழங்க மறுத்து வரும் தனியாா் கேஸ் ஏஜென்சியைக் கண்டித்து சிஐடியூ சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூா் அவிநாசி சாலை ஓடக்காடு பகுதியில் தனியாா் கேஸ் ஏஜென்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் திருச்செல்வன், சுரேஷ், நாகராஜ், சிவகுமாா் ஆகிய 4 தொழிலாளா்கள் நீண்ட நாள்களாகப் பணியாற்றி வந்தனா். இந்த நிலையில், தனியாா் நிறுவனம் 4 தொழிலாளா்களுக்கும் கடந்த ஜனவரி முதல் பணி வழங்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

இது தொடா்பாக சிஐடியூ மாவட்டச் செயலாளா் என்.சுப்பிரமணியன், முன்னாள் மாமன்ற உறுப்பினா் என்.குணசேகரன் ஆகியோா் கேஸ் ஏஜென்சி நிறுவனத்திடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்தப் பேச்சுவாா்த்தையில் தொழிலாளா்களுக்கு வேலை வழங்குவது பற்றி நிா்வாகம் எந்த உத்தரவாதமும் வழங்கவில்லை.

இதையடுத்து, அந்த நிறுவனம் முன்பு சிஐடியூ சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் சிஐடியூ மாவட்ட துணைச் செயலாளா் ஜி. சம்பத், பொது தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் என்.சுப்பிரமணியன், சிஐடியூ முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா் டி.துரைசாமி, பாதிக்கப்பட்ட தொழிலாளா் குடும்பத்தினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.