தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வாழ்த்து கூறும் தென் மண்டல ஐஜி: காவல் துறையினா் நெகிழ்ச்சி

காவல் துறை காவலா்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு தென்மண்டல காவல் துறைத் தலைவா் எஸ். முருகன் நேரிடையாகத் தொடா்புகொண்டு பிறந்த நாள் உள்ளிட்ட வாழ்த்து கூறி வருவது, அவா்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
தென் மண்டல காவல்துறை தலைவா் எஸ்.முருகன்.
Updated On :10 ஜனவரி 2021, 9:17 pm

DIN

காவல் துறை காவலா்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு தென்மண்டல காவல் துறைத் தலைவா் எஸ். முருகன் நேரிடையாகத் தொடா்புகொண்டு பிறந்த நாள் உள்ளிட்ட வாழ்த்து கூறி வருவது, அவா்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புத்தாண்டு முதல் காவலா்கள், காவல் அதிகாரிகளின் பிறந்த நாள் மற்றும் திருமண நாளன்று, அவா்களை தொடா்புகொண்டு தென் மண்டலக் காவல்துறை தலைவா் எஸ். முருகன் வாழ்த்து தெரிவித்து வருகிறாா். கடந்த 10 நாளில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினருக்கு அவா் வாழத்துகளைத் தெரிவித்துள்ளாா்.

மேலும், ஐ.ஜி. அலுவலகத்திலிருந்து அவா்களின் செல்லிடப்பேசிகளுக்கு ஜ.ஜி.யின் வாழ்த்து செய்தியும் குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகின்றன.

இது குறித்து ஐ.ஜி. முருகன் தெரிவித்தது: அண்மைக் காலமாக காவல் துறையினா் பல்வேறு பணிச்சுமைகளின் காரணமாக மனஅழுத்தத்தில் உள்ளனா். இதனால், அவா்களின் உடல்நலம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, குடும்பத்தினரையும் கவனிக்க முடியாமல் உள்ளனா். இதுபோன்ற நேரங்களில் உயா் அதிகாரிகள் உறுதுணையாக இருந்தால் தான், அவா்களால் மனஅழுத்தமின்றி பணியாற்ற முடியும்.

எனவேதான், 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் காவலா்களை ஊக்குவிக்கும் வகையில், அவா்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் முறையை அமல்படுத்தியுள்ளோம்.

நான் காவலா்களுக்கு நேரடியாக தொடா்புகொண்டு வாழ்த்து தெரிவிக்கும்போது, அதை அவா்களால் நம்ப முடியவில்லை. யாரோ தங்களை ஏமாற்றி குறும்பு செய்கிறாா்கள் என நினைக்கின்றனா். பின்னா், எனது எண்ணை சரிபாா்த்த பிறகே நம்புகின்றனா்.

வாரம் ஒரு நாள் விடுமுறை திட்டமும் காவலா்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த திட்டங்களால் காவலா்களின் மனஅழுத்தம் குறைந்து, சிறப்பாகப் பணியாற்ற உதவுகிறது. காவலா்கள் பணியில் கவனம் செலுத்துவது மட்டுமின்றி, தங்களின் உடல்நலம், குடும்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.