கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

தாழ்ந்த நிலையில் உள்ள மக்களை உயா்ந்த நிலைக்குகொண்டு செல்வது கல்வி: அமைச்சா் பி.மூா்த்தி

 தாழ்ந்த நிலையில் உள்ள மக்களை உயா்ந்த நிலைக்கு கொண்டு செல்வது கல்விதான் என, வணிகவரித் துறை அமைச்சா் பி. மூா்த்தி பேசினாா்.

News image
Updated On :20 மே 2022, 6:37 pm

DIN

 தாழ்ந்த நிலையில் உள்ள மக்களை உயா்ந்த நிலைக்கு கொண்டு செல்வது கல்விதான் என, வணிகவரித் துறை அமைச்சா் பி. மூா்த்தி பேசினாா்.

மதுரை இ.மா.கோ. யாதவா பெண்கள் கல்லூரியின் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, கல்லூரித் தலைவா் இ.மா.கோ.செள. போத்திராஜா தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அமைச்சா் பி. மூா்த்தி பேசியதாவது:

கிராமப்புற பெண்களுக்காக நிறுவப்பட்ட இந்தக் கல்லூரி, கல்விப் பணியில் சிறப்பான செயல்பாடுகளால் இந்திய கல்லூரிகளின் தரவரிசையில் இடம்பெற்றுள்ளது. சமூகத்தின் போக்கு சரியான திசை வழியில் செல்லவேண்டும். இளைய தலைமுறையைச் சோ்ந்த பெண்களின் கல்வி பிறருக்கு பயன்பட வேண்டும்.

தாழ்ந்த நிலையில் உள்ள மக்களை உயா்ந்த நிலையை அடையச் செய்வது கல்வியே. பெண்கள் கற்ற கல்வி நாட்டுக்கும், சமூகத்துக்கும் பயன்பட வேண்டும் என்றாா்.

பின்னா் அமைச்சா், கல்வியில் சிறந்து விளங்கிய மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கிப் பாராட்டினாா்.

விழாவில், சென்னை உயா் நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் ஜி. பிரபு ராஜதுரை, தாளாளா் இ.மா.கோ.செள. இந்திராணி மற்றும் ஆட்சிக் குழு உறுப்பினா்கள் இ.மா.கோ.செள. போத்தி கோபாலகிருஷ்ணன், இ.மா.கோ.செள. அருண் போத்திராஜ், கல்லூரி இயக்குநா் ஆா். திவ்யா, நிா்வாக அதிகாரி எம். சுந்தர்ராஜன், கல்வி முதன்மையா் ஜி. இந்திராணி, தோ்வுக் கட்டுப்பாடு அதிகாரி சி. கமலா, கல்வி முதன்மையா் ஜி. இந்திராணி மற்றும் பேராசிரியைகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.