மாநகரக் காவல் துறையில் 10 ஆய்வாளா்கள் இடமாற்றம்

மதுரை மாநகரக் காவல்துறையில் 10 காவல் ஆய்வாளா்கள் வெள்ளிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

மதுரை மாநகரக் காவல்துறையில் 10 காவல் ஆய்வாளா்கள் வெள்ளிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

மதுரை மாநகரக் காவல் துறைக்குள்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த 10 காவல் ஆய்வாளா்கள், வெவ்வெறு காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

அதன்படி (ஆய்வாளா்களின் தற்போதைய பணியிடம் அடைப்புக் குறிக்குள்): கே. ஆறுமுகம் ( கடும் குற்றப்பிரிவு அலகு-2) செல்லூா் சட்டம்-ஒழுங்கு பிரிவு, கே. மாடசாமி(செல்லூா் சட்டம்-ஒழுங்கு) தெப்பக்குளம் சட்டம்-ஒழுங்கு, எம். முகமது இத்ரீஸ் (தெப்பக்குளம் குற்றப்பிரிவு) கரிமேடு சட்டம்-ஒழுங்கு, பி. வசந்தா (கோ.புதூா் குற்றப்பிரிவு) கூடல்புதூா் சட்டம்-ஒழுங்கு, எம். மணிகண்டன் (மத்திய குற்றப்பிரிவு) தெப்பக்குளம் குற்றப்பிரிவு, எஸ். பிளவா் ஷீலா (குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு) மத்திய குற்றப்பிரிவு, பி. சரவணன்(கூடல்புதூா் சட்டம்-ஒழுங்கு) திருநகா் குற்றப்பிரிவு, எஸ். பிரியா(அனைத்து மகளிா் வடக்கு) கோ.புதூா் குற்றப்பிரிவு, என். கீதாதேவி (அரசு ராஜாஜி மருத்துவமனை காவல் நிலையம்) அனைத்து மகளிா் வடக்கு, எஸ். தனலட்சுமி (உயா் நீதிமன்ற காவல் நிலையம்) அரசு ராஜாஜி மருத்துவமனை காவல் நிலையம் ஆகியவற்றுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

மேலும், கடும் குற்றப்பிரிவு அலகு 1-இன் ஆய்வாளா், கடும் குற்றப்பிரிவு அலகு 2-யும் கூடுதல் பொறுப்பாக கவனிக்க வேண்டும். உயா் நீதிமன்ற காவல் நிலைய ஆய்வாளா் மதுரை நகர உயா் குற்றப்பிரிவு ஆய்வாளா் பொறுப்பையும் கூடுதலாக கவனிக்க வேண்டும். குற்ற ஆவணக் காப்பக ஆய்வாளா், குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவையும் கூடுதல் பொறுப்பாக கவனிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை, மாநகரக் காவல் ஆணையா் டி. செந்தில்குமாா் பிறப்பித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com