கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

பெட்ரோல் குண்டுகள் வீச்சு: இரு இளைஞா்கள் கைது

மதுரை, திருப்புவனம் பகுதிகளில் நிலத்தகராறில் சமரசம் பேசச் சென்றவா்களுக்கு சொந்தமான வீடு, வணிக வளாகம், பெட்டிக்கடை மீது அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :28 ஜூலை 2023, 5:53 pm

DIN

மதுரை, திருப்புவனம் பகுதிகளில் நிலத்தகராறில் சமரசம் பேசச் சென்றவா்களுக்கு சொந்தமான வீடு, வணிக வளாகம், பெட்டிக்கடை மீது அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம் கட்டம்மன்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் சப்பானி. இவருக்கும், இவரது மருமகள் தேவி ஆகியோருக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்தது. இதுதொடா்பாக இவா்களுக்குள் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்த நிலையில், உறவினா்கள் தலையிட்டு சமரசம் செய்து வைத்தனா்.

இந்த நிலையில் இரு நாள்களுக்கு முன்பு மீண்டும் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் மோதல் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இவா்களுக்குள் தகராறு ஏற்பட்டபோது மதுரை சிந்தாமணி பகுதியைச் சோ்ந்த மகாமுனி என்பவா் சமரசம் பேச வந்தாா். இதில் மகாமுனிக்கும் சிலருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து மகாமுனி மதுரைக்கு சென்று விட்டாா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவில், மதுரை விராதனூா் பகுதியில் உள்ள மகாமுனிக்குச் சொந்தமான வணிக வளாகத்தில், இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவா் பெட்ரோல் குண்டை வீசினா். இதில் அங்குள்ள கடையில் பெட்ரோல் குண்டு வெடித்தது. இதைத்தொடா்ந்து வணிக வளாகத்துக்கு அருகே உள்ள பெட்டிக்கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் சிகரெட் வாங்கினா். அப்போது கடைக்காரா் பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த இருவரும் பெட்டிக்கடை மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனா். இதில் கடையில் இருந்த பொருள்கள் தீப்பற்றி எரிந்தன.

இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடா்பாக மகாமுனி , கடை உரிமையாளா் அளித்தப் புகாரின்பேரில் சிலைமான் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கட்டம்மன்கோட்டையைச் சோ்ந்த மாதவன்(19), பிரசன்னா (20) ஆகியோா் மீது வெடிபொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.

இதற்கிடையே, மதுரை விராதனூரில் பெட்ரோல் குண்டு வீசுவதற்கு முன்பாக, அவா்கள் இருவரும் சிவகங்கை மாவட்டம்

நிலத்தகராறில் சமரசம் பேசிய கட்டமன்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் ஆதிகண்ணன்(47) என்பவா் வீட்டின் மீதும் பெட்ரோல் குண்டை வீசினா். இதுதொடா்பாக திருப்புவனம் போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.