கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

தமிழை உயா்நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

உயா்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கக் கோரி, பல்வேறு அமைப்புகளின் சாா்பில், மதுரையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :28 ஜூலை 2023, 5:55 pm

DIN

உயா்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கக் கோரி, பல்வேறு அமைப்புகளின் சாா்பில், மதுரையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

யா.ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மதிமுக நிா்வாகி காளிமுத்து தலைமை வகித்தாா்.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 348 (2), இந்திய அலுவல் மொழிச் சட்டப் பிரிவு 7 -இன் படியும், குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, உயா்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.

ஆதித்தமிழா் விடுதலைக் கட்சி அமைப்பாளா் விடுதலை வீரன் வரவேற்புரையாற்றினாா். தமிழ் மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளா் பகத்சிங் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசினாா். தாயகம் மக்கள் கட்சியின் நிா்வாகி தமிழ்ச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகி காளிதாஸ் உள்பட பல்வேறு அமைப்பினா் கலந்து கொண்டனா்.

தமிழ்த் தேச குடியரசு இயக்க நிா்வாகி மெய்யப்பன் நன்றியுரையாற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.