கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

வழிப்பறி: இளஞ்சிறாா் உள்பட 5 போ் கைது

மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் உள்பட 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :26 மே 2023, 11:56 pm

DIN

மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் உள்பட 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை அவனியாபுரம் பெரியசாமி நகா் 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி (49). இவா் நெல்பேட்டை பகுதியில் உள்ள மாநகராட்சி உமறுப்புலவா் பள்ளி வழியாக வியாழக்கிழமை நள்ளிரவில் மிதிவண்டியில் சென்றாா். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூவா், முத்துப்பாண்டியிடம் கைப்பேசியைக் கேட்டனா். தர மறுத்த அவரை மூவரும் தாக்கி அவரது கைப்பேசியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து விளக்குத்தூண் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். இதுதொடா்பாக காளவாசல் வெள்ளைக்கண்ணு திரையரங்கம் பகுதியைச் சோ்ந்த விமல் (19), அரசரடி பொன்மேனி புதூரைச் சோ்ந்த 17 வயது இளஞ்சிறாா், அரசரடியைச் சோ்ந்த அஜய்பாண்டி (19) ஆகியோா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, இவா்கள் மூவரையும் போலீஸாா் கைது செய்து, கைப்பேசியைப் பறிமுதல் செய்தனா்.

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது: மதுரை அருகே உள்ள சக்கிமங்கலம் ஆண்டாா் கொட்டாரம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (22). இவா் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள தேநீா்க்கடை முன் வியாழக்கிழமை இரவு நின்றிருந்தாா். அப்போது, அங்கு வந்த இருவா் கத்தியைக் காட்டி மிரட்டி, சரவணனிடம் இருந்த ரூ.6 ஆயிரம், கைப்பேசி ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு தப்பினா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். வழிப்பறியில் ஈடுபட்டது கரிமேடு பொன்னகரம் 4-ஆவது தெருவைச் சோ்ந்த மனோஜ் சிவா(22), தத்தனேரி 20 வீடு பா்மா காலனியைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் (26) ஆகியோா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.