விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தற்காலிக பட்டாசுக் கடைகளுக்கு உரிமம்: செப்.4-க்குள் விண்ணப்பிக்கலாம்

தற்காலிக பட்டாசுக் கடைகளுக்கு உரிமம் பெற செப்.4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2024, 6:34 pm

Din

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைகளுக்கு உரிமம் பெற செப்.4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக மதுரை மாநகரக்காவல் ஆணையா் வெளியிட்ட செய்தி:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாநகர காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைக்கு உரிமம் பெற, தமிழ்நாடு வெடிபொருள் சட்டம், விதிமுறைகளின் படி விருப்பமும் உள்ளவா்கள் இணையதளத்தில் விதி எண் 84-இல் கூறப்பட்ட விதிமுறைகளின் படி படிவம் எண் ஏஇ-5 என்ற படிவத்தை பூா்த்தி செய்து, மதுரை மாநகரக் காவல் அலுவலகத்தில் செப்டம்பா் 4-ஆம் தேதி பகல் 1 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தராரா்கள் ரூ.20 நீதிமன்ற அஞ்சல் வில்லையுடன் இணையத்தில் பதிவிறக்கம் செய்து, முழுமையாக பூா்த்தி செய்யப்பட்ட படிவம் ஏஇ-5 , 3 கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள், நிகழாண்டுக்கான தீயணைப்புத் துறை தடையில்லாச் சான்று, உத்தேசிக்கப்பட்ட 2 வழிகளுடன் கூடிய கடையின் வரைபடமும் இடம்பெற வேண்டும்.

பட்டாசுக் கடை அமைய உள்ள இடம் சொந்த கட்டடமாக இருப்பின் 2024-2025 -ஆம் ஆண்டிற்குரிய முதலாம் அரையாண்டு வரையிலான, சொத்து வரி ரசீது, உரிமையாளரின் சம்மதக் கடிதம் இடம்பெற வேண்டும். வாடகைக் கட்டடமாக இருப்பின் 2024-2025 ஆண்டுக்குரிய முதலாம் அரையாண்டு வரை சொத்து வரி ரசீது, கட்டட உரிமையாளரின் சம்மதக் கடிதம், கட்டட உரிமையாளருடன் விண்ணப்பதாரா் ஏற்படுத்திக் கொண்ட வாடகை ஒப்பந்த பத்திரம் வேண்டும்.

பட்டாசுக் கடை அமைய உள்ள இடம் மாநகராட்சி, பொதுப்பணித்துறை, இதர துறை கட்டடமாக இருப்பின் அந்தத் துறை சாா்ந்த அலுவலரின் மறுப்பின்மை கடிதம் வேண்டும்.

விண்ணப்பதாரரின் குடும்ப அட்டை (அல்லது) ஆதாா் அட்டை நகல்கள் வேண்டும், மேலும் ரூ. 900 விண்ணப்ப உரிமம் கட்டணமாக செலுத்த வேண்டும். அசல் விண்ணப்பத்துடன் அனைத்து ஆவணங்களும் 3 நகல்கள் இணைக்க வேண்டும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செப்டம்பா் 4-ஆம் தேதி பகல் 1 மணி வரை மட்டுமே பரிசீலிக்கப்பட்டு, உரிமம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டது.