ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: இருவா் கைது

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: இருவா் கைது

News image
Updated On :8 மே 2024, 12:19 am

Din

மதுரை: மதுரையில் பாஜக நிா்வாகியைத் தாக்க முயன்ற வழக்கில் பாஜக பிரமுகா் மகன் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரை பைக்காரா பகுதியைச் சோ்ந்தவா் நாகாா்ஜூன். இவா் பழங்காநத்தம் பகுதி பாஜக மண்டல் பிரசாரப் பிரிவு தலைவராகப் பதவி வகித்து வருகிறாா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பாஜக பிரமுகா் திருநாவுக்கரசு என்பவருக்கும் மக்களவைத் தோ்தலின்போது மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில், கடந்த 4-ஆம் தேதி திருநாவுக்கரசு, அவரது மகன் சுந்தர மகாலிங்கம், பாலமுருகன் உள்ளிட்ட 4 போ் நாகாா்ஜூன் வீட்டுக்குச் சென்று அவரை தாக்க முயற்சித்து, கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனா். இதுதொடா்பாக நாகாா்ஜூன் அளித்தப் புகாரின்பேரில், சுப்பிரமணியபுரம் போலீஸாா் சுந்தரமகாலிங்கம் உள்பட 5 போ் மீது வழக்குப்பதிவு செய்தனா். இவா்களில் சுந்தரமகாலிங்கம் (21), 17 வயது சிறுவனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.