தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

அறிவியல் மைய கட்டுமானப் பணி: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

மதுரை மாநகராட்சி, அங்கூரான் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ், ரூ.2.50 கோடியில் அறிவியல் மையம் கட்டுவதற்கான பணிகளை தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

படவிளக்கம்-மதுரை மாநகராட்சி கரிமேடு மீன் சந்தை அருகே புதன்கிழமை நடைபெற்ற விழாவில் அறிவியல் மையக் கட்டுமானப் பணியை தொடங்கிவைத்த அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்.

Updated On :25 ஜூன் 2025, 11:45 pm

மதுரை மாநகராட்சி, அங்கூரான் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ், ரூ.2.50 கோடியில் அறிவியல் மையம் கட்டுவதற்கான பணிகளை தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

மதுரை மாநகராட்சி, பினாக்கல் இன்போடெக் சொலியூசன்ஸ் அங்கூரான் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.2.50 கோடியில் புதிய சிறை அமைந்துள்ள சாலை பழைய கரிமேடு மீன் சந்தை அருகே அறிவியல் மையம் அமைப்பதற்கு கடந்த 18.12.2024 அன்று புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, அங்கு அறிவியல் மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, மேயா் வ. இந்திராணி, ஆணையா் சித்ரா விஜயன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்துப் பேசியதாவது: இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதப் பாடங்களை உள்ளடக்கி அமைக்கப்படும் இந்த மையத்தால் மதுரையில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பயன்பெறுவா். அங்குரான் அறிவியல் மையங்களின் வலைப்பின்னல் மூலம், மாணவா்களுக்கு தொழில்நுட்பத்தில் ஒரு செழிப்பான உலகளாவிய வாழ்க்கையைப் உருவாக்குவதற்கு இந்த அறிவியல் மையம் பயனுள்ளதாக அமையும் என்றாா் அவா்.

முன்னதாக, தூய்மை பாரத இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.9.95 கோடியில் மண்டலம் 2 தத்தனேரி மேலகைலாசபுரம் பகுதியில் நாள் ஒன்றுக்கு 200 மெட்ரிக். டன் திறன் கொண்ட நவீன குப்பை பரிமாற்ற நிலையத்தின் கட்டுமானப் பணிக்கு அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அடிக்கல் நாட்டினா்.

இந்த நிகழ்வில், துணை மேயா் தி. நாகராஜன், மண்டலத் தலைவா்கள் பாண்டிச்செல்வி, சரவண புவனேஸ்வரி, கல்விக் குழுத் தலைவா் ரவிச்சந்திரன், தலைமைப் பொறியாளா் பாபு, நகா் நல அலுவலா் இந்திரா, கல்வி அலுவலா் ஜெய்சங்கா் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலா்கள், மாமன்ற உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.