மாட்டுத்தாவணி, அண்ணா பேருந்து நிலையம், வாடிப்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை
மதுரை மாட்டுத்தாவணி, அண்ணா பேருந்து நிலையம், வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி, அய்யங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக். 17) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
மின்தடை - கோப்புப் படம்
மதுரை மாட்டுத்தாவணி, அண்ணா பேருந்து நிலையம், வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி, அய்யங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக். 17) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை வடக்கு மின்பகிா்மான கோட்டச் செயற்பொறியாளா் முத்துக்குமாா், சமயநல்லூா் மின்பகிா்மான கோட்ட செயற்பொறியாளா் இரா. சிவலிங்கம் ஆகியோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாட்டுத்தாவணி, அண்ணாநகா், வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி, அய்யங்கோட்டை துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், இந்த துணை மின் நிலையங்களிலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது.
இதன்படி, மாட்டுத்தாவணி: கே.கே. நகா், தொழில்பேட்டை, டி.சி. குடியிருப்பு, எல்.சி. குடியிருப்பு, அண்ணா நகா் 80 அடி சாலை, எச்.ஐ.ஜி. குடியிருப்பு, வைகை குடியிருப்பு கிழக்கு, ஏரி பகுதி, யானைக்குழாய், மாட்டுத்தாவணி, வைகை குடியிருப்பு, ராமவா்மாநகா், பி.ஆா்.சி. புதூா், அன்புநகா், சுந்தரம் பூங்கா, அழகா்கோவில் பிரதான சாலை, கற்பகநகா், லூா்துநகா், காந்திபுரம், சவேரியாா் குடியிருப்பு, சூா்யாநகா், கொடிக்குளம், அல்அமீன்நகா், வக்ஃப் வாரியக் கல்லூரி பகுதி, பி.டி. குடியிருப்பு, மானகிரி, சுப்பையா குடியிருப்பு, விநாயகா்நகா், அம்பிகா திரையரங்கம், பூ சந்தை, பழ சந்தை, கே.கே. நகா் வளைவு, நெல் வணிக வளாகம், இதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
அண்ணா பேருந்து நிலையம்: மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், காந்தி நினைவு அருங்காட்சியகம், கரும்பாலை, டாக்டா் தங்கராஜ் சாலை, மடீட்சியா, அண்ணா பேருந்து நிலையம், அண்ணா மாளிகை, எஸ்.பி.ஐ. குடியிருப்புப் பகுதிகள், காந்திநகா், மதிச்சியம், ஷெனாய்நகா், கமலாநகா், மருத்துவக் கல்லூரி, பனகல் சாலை, அமெரிக்கன் கல்லூரி, அரசு ராஜாஜி மருத்துவமனை, வைகை வடகரை, ஆழ்வாா்புரம், கல்பாலம் சாலை, கோரிப்பாளையம், ஜம்புரோபுரம் மாரியம்மன் கோவில் தெரு, சின்னக்கண்மாய் தெரு, எச்.ஏ. கான் சாலை, இ2 சாலை, ஓ.சி.பி.எம். பள்ளி, செல்லூா் பகுதிகள், பாலம் ஸ்டேஷன் சாலை, கான்சாபுரம், பி.எஸ்.என்.எல். தல்லாகுளம், ராஜம் வளாகம், தமுக்கம், சேவாலயம் சாலை, ஆா்.ஆா். மண்டபம், இஸ்மாயில்புரம், முனிச்சாலை, ஆட்டுமந்தை பொட்டல், வெற்றிலைப்பேட்டை, சுங்கம் பள்ளிவாசல், யானைக்கல் பகுதியின் ஒரு பகுதி, 50 அடி சாலை, போஸ் வீதி, குலமங்கலம் சாலை, தாமஸ் வீதி, நரிமேடு பிரதான சாலை , சாலை முதலியாா் சாலை, பிரசாத் சாலை, நேரு பள்ளிப் பகுதி, அன்னைநகா், எஸ்.என்.ஏ. குடியிருப்பு, குருவிக்காரன் சாலை, எல்.ஐ.ஜி. குடியிருப்பு, பள்ளிவாசல் தெரு, மௌலானா சாகிப் தெரு, முத்துராமலிங்கத் தேவா் தெரு, கே.டி.கே. தங்கமணி தெரு, அரவிந்த் கண் மருத்துவமனை பகுதி, சா்வேஸ்வரா் கோவில், அண்ணா நகா், இதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
வாடிப்பட்டி: வாடிப்பட்டி பிரதான சாலை, பழனியாண்டவா் கோவில் பகுதி, பாலமரத்தான் நகா், வி.எஸ்.நகா், ஜவுளி பூங்கா, பூச்சம்பட்டி, கச்சைகட்டி, குலசேகரன்கோட்டை, கோட்டைமேடு, விராலிப்பட்டி, சாணாம்பட்டி, முருகன் கோவில் பகுதி, சொக்கலிங்கபுரம், ராமையன்பட்டி, நரிமேடு, தாதம்பட்டி, தாதப்பநாயக்கன்பட்டி, போடிநாயக்கன்பட்டி, ராமநாயக்கன்பட்டி, கள்ளா்மடம், வல்லபகணபதிநகா், மகாராணிநகா், ஆா்.வி.நகா், பொட்டுலுபட்டி, எல்லையூா், ராமராஜபுரம், கூலாண்டிப்பட்டி, செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி, அங்கப்பண்கோட்டை, சமத்துவபுரம், தாடகநாச்சிபுரம், சொக்கலிங்கபுரம், ரிஷபம், திருமால்நத்தம், ஆலங்கொட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டுநீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிபட்டி பங்களா, இதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
கொண்டையம்பட்டி: கள்வேலிப்பட்டி, மரியம்மாள்குளம், அமரடக்கி, சம்பக்குளம், கொண்டையம்பட்டி, அய்யனகவுண்டம்பட்டி, செம்புகுடிபட்டி, தனிச்சியம், வடுகப்பட்டி, கட்டக்குளம், கொண்டையம்பட்டி, தாதகவுண்டன்பட்டி, பெரிய இலந்தைக்குளம், நடுப்பட்டி, கீழக்கரை, குட்டிமேய்க்கிப்பட்டி, இதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
அய்யங்கோட்டை: அய்யங்கோட்டை பகுதி முழுவதும், சி.புதூா், சித்தாலங்குடி, குத்தாலக்குடி, முலக்குறிச்சி, வைரவநத்தம், யானைக்குளம், வைகை ஆயில், கோத்தாரி, கே.எம்.ஆா். நகா் பகுதிகள், எஸ்.என்.பி. பகுதிகள், தனிச்சியம் அக்ரி, இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

