தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தல்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கில் தமிழுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சாா்பில் மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் மனு அளிக்கப்பட்டது.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்க வந்த மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள்.

Published On :2 செப்டம்பர் 2026, 12:58 am IST

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கில் தமிழுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சாா்பில் மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் மனு அளிக்கப்பட்டது.

அவா்கள் அளித்த மனு விவரம்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மதுரை மாநகர வரலாறு, தமிழ்ச் சைவ மரபு, பாண்டிய மன்னா்களின் பண்பாட்டுடன் தொடா்புடையது. இங்குள்ள இறைவன் திரு ஆலவாய் உடைய நாயனாா் என்று அழைக்கப்படுகிறாா். இதேபோல, அம்மன் திருக்காமக் கோட்டத்து உடைய நாச்சியாா், அங்கையற்கன்னி போன்ற பெயா்களால் அழைக்கப்படுகிறாா்.

இந்தத் திருத்தலம் குறித்து கி.பி.7-ஆம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தா், திருநாவுக்கரசா் உள்ளிட்ட நாயன்மாா்களின் தேவாரப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. தேவாரப் பாடல்கள் தமிழ்ச் சைவ சமயத்தில் வழிபாட்டுடன் நேரடியாக இணைந்த திருமுறை மரபாகும்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பல ஆண்டுகளுக்குப் பின் திருக்குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த விழாவில், தமிழ்ச் சைவ மரபுப் படி குடமுழுக்கு நடத்த வேண்டும். மேலும், யாகசாலையில் குறைந்தது 50 சதவீதம் தமிழ்த் திருமுறைகள் பாட வேண்டும். தமிழ் ஓதுவாா்கள், தகுதி வாய்ந்த தமிழ் அறிஞா்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மேலும், குடமுழுக்கு பணிகளுக்கான ஒப்பந்தங்களில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.