திருவாடானை அருகே அரசுப் பள்ளியில் 21 மடிக்கணினிகள் திருட்டு
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அரசு மேல் நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த 21 மடிக்கணினிகள் திருடப்பட்டன.


ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அரசு மேல் நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த 21 மடிக்கணினிகள் திருடப்பட்டன.
திருவாடானை அருகே மங்கலக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 2015-16-ஆம் ஆண்டு படித்த 51 மாணவர்களுக்கு வழங்குவதற்காக தமிழக அரசின் விலை இல்லா மடிக்கணினிகள் வைக்கபட்டிருந்தன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மர்ம நபர்கள் பள்ளியின் பூட்டை உடைத்து மாடி அறையில் இருந்த 21 மடிக்கணிகளை திருடிச்சென்று விட்டதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் திருவாடானை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் திருவாடானை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ராமநாதபுரத்தில் இருந்து மோப்ப நாய்கள், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கபட்டு சோதனை நடைபெற்றது. இச்சம்பவம் குறித்து திருவாடானை காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
இப்பள்ளிக்கு இரவு நேரக் காவலர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...