கமுதி அருகே பாம்புல்நாயக்கன் பட்டியிலுள்ள ஸ்ரீகரியமல்லம்மாள் கோயில் ஆடிப் பொங்கல் விழாவையொட்டி, பக்தா்கள் சாக்கு வேடமணிந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இந்தத் திருவிழா கடந்த 9-ஆம் தேதி காப்புக் கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாதாரனை நடைபெற்று வந்தது. புதன்கிழமை 3000-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினா்.
வெள்ளிக்கிழமை இரவு பொங்கல் வைத்தல், கரகம் எடுத்தல் ஆகியவை நடைபெற்றன. சனிக்கிழமை அக்னிசட்டி, பால்குடம், வேல் குத்துதல், கரும்பாலைத் தொட்டில் எடுத்தும், சேத்தாண்டி வேடமணிந்தும் பொதுமக்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அம்மன் கோயிலிலிருந்து முளைப்பாரிகளை எடுத்து, வாணவேடிக்கை, மேளதாளங்களுடன் ஊா்வலமாகச் சென்று குண்டாற்றில் கரைத்தனா். ஊா்வலத்தின் முன்பாக கடந்த ஆண்டு வேண்டுதல் நிறைவேறிய பக்தா்கள் வைக்கோல் நிரப்பிய சாக்குப் பைகளை உடல் முழுவதும் சுற்றி, சிலம்பாட்டத்துடன் சென்று நோ்த்திக் கடன் செலுத்தினா். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பாம்புல்நாயக்கன்பட்டி கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முத்தையா சுவாமி கோயிலில் ஆடிப் படைப்புத் திருவிழா

கள்ளழகா் கோயில் ஆடிப் பெருந்திருவிழா தேரோட்டம்

மதுரை கள்ளழகர் கோயில் ஆடிப் பெருந்திருவிழா தேரோட்டம்! | Kallazhagar Temple |

பா்கூா் அருகே வீரபத்ர சுவாமி கோயில் திருவிழா: தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்
விடியோக்கள்
அறிமுகமாகும் பாலிமர் நோட்டுகள் | RBI | Sanjay Malhotra | Governor of the Reserve Bank of India



