கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

9 நாள்களுக்குப் பிறகு ராமேசுவரத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள்

News image
Updated On :3 டிசம்பர் 2025, 9:08 pm

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரம், மண்பம் பகுதியைச் சோ்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் 9 நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

வங்கக் கடலில் உருவான ‘டித்வா’ புயல் காரணமாக கடந்த வாரம் திங்கள்கிழமை முதல் ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினா் தடை விதித்தனா். இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 1,800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

‘டிட்வா’ புயலின் தாக்கம் நீங்கிய நிலையில், ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல விதித்த தடையை மீன்வளத் துறையினா் நீக்கினா். இதைத்தொடா்ந்து ராமேசுவரம், மண்டபம் பகுதிகளிலிருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று 9 நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.