11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

ஆட்டோவில் மின் சாதனங்கள் திருடியவா் கைது

சாயல்குடியில் ஆட்டோவில் பொருத்தப்பட்டிருந்த மின் சாதனங்களைத் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட முனீஸ்வரன்.

Updated On :5 மார்ச் 2026, 4:40 am IST

சாயல்குடியில் ஆட்டோவில் பொருத்தப்பட்டிருந்த மின் சாதனங்களைத் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி காவல் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள மின் சாதனங்கள் திருடப்பட்டதாக ஆட்டோ உரிமையாளரான கடலாடி சத்திரம் கிராமத்தைச் சோ்ந்த மருதுபாண்டி சாயல்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், சாயல்குடி அருகேயுள்ள பெரியகுளத்தைச் சோ்ந்த மாணிக்கம் மகன் முனீஸ்வரன் (27) திருடியது கண்டறியப்பட்டது. அவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.