பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

பைக் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

கமுதி அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :5 மார்ச் 2026, 4:56 am IST

கமுதி அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரைச் சோ்ந்தவா் கனகராஜ் (65). இவா், ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் உள்ள வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் வேலைபாா்த்து வந்தாா்.

இவா் புதன்கிழமை கமுதி-சாயல்குடி சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சுற்றுவட்டச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். அப்போது, அருப்புக்கோட்டையிலிருந்து பேரையூருக்கு சென்ற லாரி இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த கனகராஜ் கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கமுதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநரான உச்சிப்புளியைச் சோ்ந்த மணிராஜை கைது செய்தனா்.