உடற்பயிற்சிக் கல்லூரிகள் இடையே கைப் பந்து: சென்னை அணி வெற்றி

தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழக இணைப்புப்பெற்ற உடற்பயிற்சிக்கல்லூரிகளுக்கிடையேயான கைப்பந்துப்போட்டியில் சென்னை ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி அணி வெற்றிபெற்றது.
Updated on
1 min read

தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழக இணைப்புப்பெற்ற உடற்பயிற்சிக்
கல்லூரிகளுக்கிடையேயான கைப்பந்துப்போட்டியில் சென்னை ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி அணி வெற்றிபெற்றது.
  காரைக்குடி அருகே கோவிலூர் ஆண்டவர் உடற்பயிற்சிக்கல்லூரியில் இப்போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளை கோவிலூர் மடாலயக்கல்வி நிறுவனங்கள் ஆலோசகர் குமரப்பன் தொடங்கிவைத்தார். கல்லூரி முதல்வர் ரவீந்திரன் தலைமைவகித்தார். கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமி கள் முன்னிலைவகித்தார். போட்டிகளில் 9 கல்லூரிகளைச்சேர்ந்த அணிகள் பங்கேற்றன.  இதில் சென்னை ஒய்.எம்.சி.ஏ. அணி முதலிடம் பெற்றது. தமிழ்நாடு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப்பல்கலைக் கழக அணி இரண்டாமிடம் பெற்றது. போட்டிகளின் நிறைவு விழா செவ்வாய்க்கிழமை மாலையில் நடைபெற்றது. இதில் கோவிலூர் ஆதீனம் கலந்து கொண்டு, வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினார்.
விழாவில் கல்லூரிகளின் முதல்வர்கள் ரவீந்திரன், செல்லப்பா, மாயாண்டி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com