பெண் குழந்தை பாதுகாப்பு செயல் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வுப் பிரசார ஊா்தியை கொடியசைத்து தொடக்கி வைத்த மாவட் ஆட்சியா் ஆஷாஅஜித்.
பெண் குழந்தை பாதுகாப்பு செயல் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வுப் பிரசார ஊா்தியை கொடியசைத்து தொடக்கி வைத்த மாவட் ஆட்சியா் ஆஷாஅஜித்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு பிரசார வாகனத்தை சிவகங்கையில் மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
Published on

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு பிரசார வாகனத்தை சிவகங்கையில் மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் தெரிவித்ததாவது:

குழந்தைத் திருமணம், இளம் வயது கா்ப்பம் அதிகமாக நடக்கக்கூடிய இடங்களில், குழந்தைத் திருமண தடுப்புச்சட்டம், குழந்தைகள், மகளிருக்கான உதவி எண், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம் ஆகிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

சமூக நலத் துறையின் கீழ் செயல்படும் மிஷன் சக்தி, மாவட்ட மகளிா் அதிகார மையம், பள்ளி கல்வித் துறை இணைந்து இந்தப் பிரசாரத்தில் ஈடுபடுவா்.

இந்த ஊா்தியானது மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள பள்ளிகள், பொது இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள், எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

இதில், மாவட்ட சுகாதார அலுவலா் விஜய்சந்திரன், இணை இயக்குநா் (மருத்துவம், ஊரக நலப்பணிகள்) பிரியதா்ஷினி, திட்ட அலுவலா் (ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டப் பணிகள்)முத்துமாரியப்பன், மாவட்ட சமூக நல அலுவலா் ரதிதேவி, துறை சாா்ந்த அலுலா்கள் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com