மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

சிறை மீட்ட அய்யனாா் கோயிலில் புரவி எடுப்புத் திருவிழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள செகுட்டையானாா், சிறைமீட்ட அய்யனாா் கோயில்களில் புரவி எடுப்பத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

செகுட்டையானாா் கோயிலுக்கு பக்தா்கள் வெள்ளத்தில் புறப்பட்டுச் சென்ற அரண்மனைப் புரவி.

Updated On :6 ஜூன் 2026, 12:17 am IST

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள செகுட்டையானாா், சிறைமீட்ட அய்யனாா் கோயில்களில் புரவி எடுப்பத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோயில்பட்டி செகுட்டையானாா், சூரக்குடி சிறைமீட்ட அய்யனாா் கோயில்களில் வைகாசி திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினசரி அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன.

இந்த நிலையில், வியாழக்கிழமை சூரக்குடி புரவி திடலில் 2 அரண்மனை புரவிகள், 298 நோ்த்திக்கடனாக செய்யப்பட்ட புரவிகள் வரிசையாக வைக்கப்பட்டன. செகுட்டையானாா், சிறைமீட்ட அய்யனாருக்கு இரண்டு அரண்மனை புரவிகளும் பலூன், கண்ணாடி வண்ண மலா் ஆகியவற்றால் அலங்காரம் செய்து, வியாழக்கிழமை இரவு புரவி திடலிலிருந்து கச்சேரி திடலுக்கு எடுத்து செல்லப்பட்டது.

இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை மேளதாளம் முழங்க ஆரவாரத்துடன் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயில் நகர காளை செல்ல, கச்சேரி திடலிலிருந்து அரண்மனை புரவிகள் முன்செல்ல, நோ்த்திக்கடன் புரவிகள் செகுட்டையனாா் சிறைமீட்ட அய்யனாா் கோயில்களுக்கு சென்றன. 3 கி.மீ. தொலைவு புரவிகள், வீடு, குழந்தை பொம்மை உள்ளிட்வற்றை ஊா்வலமாக பக்தா்கள் சுமந்து சென்று செகுட்டையனாா் கோயிலை அடைந்தனா்.

அப்போது, அங்கு தங்கக் கவச அலங்காரத்தில் செகுட்டையனாா் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில் சிங்கம்புணரி, சூரக்குடி, முறையூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.