இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

சின்னமனூர் அருகே அரசுப் பள்ளிஆசிரியைகள் மீது தீண்டாமை புகார் எதிரொலி: 2 ஆசிரியைகள் தற்காலிக இடம் மாற்றம்

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே அரசுப் பள்ளியில்  பட்டியல் இன மாணவர்களிடம் தீண்டாமை கடைப்பிடிப்பதாக எழுந்த

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே அரசுப் பள்ளியில்  பட்டியல் இன மாணவர்களிடம் தீண்டாமை கடைப்பிடிப்பதாக எழுந்த புகாரின் எதிரொலியாக, மாவட்டக் கல்வி அலுவலர் 2 ஆசிரியைகளை தற்காலிக இடமாற்றம் செய்துள்ளார்.
எரசக்கநாயக்கனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் பட்டியல் இன மாணவர்களிடம், அப்பள்ளி ஆசிரியைகள் இருவர் தீண்டாமையை கடைப்பிடிப்பதாக சில நாள்களுக்கு முன் அப்பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. 
அதையடுத்து, ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகள் பள்ளி மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமுத்து, உத்தமபாளையம் கல்வி மாவட்ட அலுவலர் திருப்பதி ஆகியோரும், அப்பள்ளி ஆசிரியைகளிடம்   விசாரணை நடத்தினர். 
இது சம்பந்தமாக தொடர்ந்து 10 நாள்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அப்பள்ளியின் வேதியியல் பாடப் பிரிவு ஆசிரியை கம்பம் நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கும், உயிரியல் ஆசிரியை பெரியகுளம் அடுத்துள்ள லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் திங்கள்கிழமை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி, இந்த 2 ஆசிரியைகளும் அந்தந்தப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை பணியில் சேர்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.