நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

கம்பத்தில் கேட்பாரற்று நின்ற காரை கைப்பற்றி போலீஸார் விசாரணை

கம்பத்தில்  கேட்பாரற்று நின்றிருந்த காரை போலீஸார் வியாழக்கிழமை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Published On :

கம்பத்தில்  கேட்பாரற்று நின்றிருந்த காரை போலீஸார் வியாழக்கிழமை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் பிரதான சாலையில்  வ.உ.சி. மைதானம் தனியார் உணவக வாசலில் புதன்கிழமை காலையில் நிறுத்தப்பட்ட கேரள பதிவெண் கொண்ட கார், வியாழக்கிழமை வரை கவனிப்பாரற்று நின்றிருந்தது.  
இதுகுறித்து தகவலறிந்த கம்பம் தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் முனியம்மாள், திவான்மைதீன்  உணவக ஊழியர்களிடம் விசாரணை செய்தனர். புதன்கிழமை காலை சுமார் 25 வயதுடைய இளம்பெண்ணும், 30 வயது மதிக்கத்தக்க இளைஞரும் சாப்பிட்டு உள்ளனர். 
பின்னர் காரை நிறுத்திவிட்டு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர்கள் திரும்ப வரவில்லை என உணவக ஊழியர்கள் தெரிவித்தனர். அந்த கார் கதவு பூட்டப்படாமல் இருந்தது.  காரினுள் ஓட்டுநர் இருக்கை அருகே  பதிவு சான்றிதழ் இருந்தது. அதனை போலீஸார் கைப்பற்றி விசாரித்த போது, கார் கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த  அலெக்ஸ் சேவியர் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. 
செல்லிடப்பேசியில்  போலீஸார் தொடர்பு கொண்ட போது தனது காரை நண்பர் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு  எடுத்துச் சென்றதாகவும், அவரை தொடர்பு கொண்ட போது, செல்லிடப்பேசி அணைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.