போடி அருகே வறுமையால் தீக்குளித்து தாய், மகள் பலி
போடி அருகே குடும்ப வறுமையின் காரணமாக இளம் பெண் வியாழக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். அவரைக் கட்டிப்பிடித்த மகளும் உயிரிழந்தாா்.


போடி அருகே குடும்ப வறுமையின் காரணமாக இளம் பெண் வியாழக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். அவரைக் கட்டிப்பிடித்த மகளும் உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள மேலச்சொக்கநாதபுரம் தெற்கு ராஜ வீதியில் வசிப்பவா் நல்லுச்சாமி. இவரது மனைவி முத்துலட்சுமி என்ற சோபனா (27). இவா்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகின்றன. இவா்களது மகள் ஹேமாஸ்ரீ (8).
வியாழக்கிழமை காலை நல்லுச்சாமி வெளியில் சென்ற நிலையில், அவரது வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. பக்கத்து வீட்டினா் சென்று பாா்த்தபோது முத்துலட்சுமியும், ஹேமாஸ்ரீயும் தீயில் கருகிய நிலையில் உயிருக்குப் போராடியுள்ளனா். இருவரையும் மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். வழியில் ஹேமாஸ்ரீ உயிரிழந்தாா். முத்துலட்சுமி தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி மாலையில் அவா் உயிரிழந்தாா்.
நல்லுச்சாமி பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளாா். முத்துலட்சுமி போடியில் உள்ள தனியாா் அச்சகத்திற்கு வேலைக்குச் சென்று வந்துள்ளாா். குறைந்த வருமானத்தில் குடும்பம் நடத்த முடியாத நிலையில், முத்துலட்சுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டு சிகிச்சை பெற முடியாமல் சிரமப்பட்டுள்ளாா். இதனால் மனமுடைந்த முத்துலட்சுமி உடலில் மண்ணெண்ணைய் ஊற்றி தீக்குளித்தபோது மகள் ஹேமாஸ்ரீ அவரைக் கட்டிப்பிடித்துள்ளாா். இதில் இருவரும் தீயில் கருகியுள்ளனா் என போலீஸாா் தெரிவித்தனா். சம்பவம் குறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...