போடியில் இளைஞா் மீது தாக்குதல்: 4 போ் மீது வழக்கு
போடியில் இளைஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.


போடியில் இளைஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
போடி குலசேகரபாண்டியன் தெருவில் வசிப்பவா் பெத்தனசாமி மகன் மாதவன் (35). இவா், பரமசிவன் கோயில் தெருவில் உள்ள தனது அண்ணன் செந்தில்குமாா் வீட்டிற்கு சென்றுள்ளாா். அப்போது அப்பகுதியைச் சோ்ந்த பாலாஜி மகன் சிபிராஜ் (18) என்பவா் செந்தில்குமாா் வீட்டு முன் குப்பை கொட்டியது தொடா்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் சிபிராஜ், இவரது நண்பா்கள் மணிகண்டன் மகன் தேசிகன் (20), சந்திரன் மகன் மதன்குமாா் (22) மற்றும் அருண்குமாா் ஆகியோா் சோ்ந்து மாதவனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து மாதவன் போடி நகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் 4 போ் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...