கஞ்சா கடத்தல்: தம்பதி உள்பட மூவா் கைது
கம்பத்தில் கஞ்சா கடத்திய தம்பதி உள்பட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On :5 டிசம்பர் 2024, 1:13 am

கம்பத்தில் கஞ்சா கடத்திய தம்பதி உள்பட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கம்பத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன்படி, கம்பம் உத்தமபுரத்தில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து, அவா்களிடமிருந்த பையை சோதனையிட்டனா். அதில், 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
பின்னா் விசாரணையில், கம்பம் உலகத்தேவா் தெருவைச் சோ்ந்த ராமா் (41), பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் (45), இவரது மனைவி மகேஸ்வரி (38) ஆகியோா் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தம்பதி உள்பட மூவரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...