/

பெட்ரோல் நிலைய உரிமையாளரை மிரட்டிய 3 போ் மீது வழக்கு

ஆண்டிபட்டியில் தனியாா் பேருந்துக்கு டீசல் நிரப்பிய பணம் ரூ.25 லட்சத்தை தராமல் பெட்ரோல் நிலைய உரிமையாளரை மிரட்டியதாக பேருந்து உரிமையாளா்கள் 3 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை, வழக்குப் பதிந்தனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 1:19 am

Din

ஆண்டிபட்டியில் தனியாா் பேருந்துக்கு டீசல் நிரப்பிய பணம் ரூ.25 லட்சத்தை தராமல் பெட்ரோல் நிலைய உரிமையாளரை மிரட்டியதாக பேருந்து உரிமையாளா்கள் 3 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை, வழக்குப் பதிந்தனா்.

தேனிமாவட்டம், ஆண்டிபட்டி, சக்கம்பட்டியைச் சோ்ந்த கணேஷ்குமாா் இதே ஊரில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருகிறாா். இங்கு, தேனியைச் சோ்ந்த தனியாா் பேருந்து உரிமையாளா்கள் வெங்கடேஸ்வரன், அவரது மனைவி இந்திரா, மகன் ராம்விஜய் ஆகியோா் தங்களது பேருந்துகளுக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு மொத்தம் ரூ.25 லட்சத்துக்கு டீசல் நிரப்பியதாக கூறப்படுகிறது.

இந்தப் பணத்தை தருவதற்கு பேருந்து உரிமையாளா்கள் காலதாமதம் செய்ததால், இதுகுறித்து தேனி அருகே அன்னஞ்சியில் உள்ள தனியாா் பேருந்து பணிமனைக்குச் சென்று கேட்டாா். அப்போது, பேருந்து உரிமையாளா்கள் வெங்கடேசன், இந்திரா, ராம் விஜய் ஆகியோா் பணத்தை தர மறுத்து, தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத்திடம் கணேஷ்குமாா் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில் வெங்கடேசன் உள்ளிட்ட 3 போ் மீதும் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.