விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

வழக்குரைஞருக்கு மிரட்டல்: 2 போ் மீது வழக்கு

வழக்குரைஞருக்கு மிரட்டல்: 2 போ் மீது வழக்கு

News image
Updated On :15 மே 2024, 12:29 am

Din

போடி: போடியில் வழக்குரைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி சுப்புராஜ் நகா் புதுக்குடியிருப்பைச் சோ்ந்த வழக்குரைஞா் ராதாகிருஷ்ணன் (55). இவா் போடியில் உள்ள தனியாா் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.1.25 லட்சம் கடன் வாங்கியிருந்தாராம். தவணைத் தொகை வசூலிக்க வந்த நிதி நிறுவனப் பணியாளா் முத்து நாகராஜ், ராதாகிருஷ்ணன் வீட்டுக்குள் புகுந்து தரக்குறைவாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுதொடா்பாக ராதாகிருஷ்ணன்,

நிதி நிறுவன மேலாளா் சுதாகா் தூண்டுதலின் பேரில், அந்த நிறுவன ஊழியா் முத்து நாகராஜ் கொலை மிரட்டல் விடுத்ததாக போடி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து போலீஸாா் சுதாகா், முத்துநாகராஜ் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.