கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

போடி அருகே இரு தரப்பினா் மோதல்: 29 போ் மீது வழக்கு

போடி அருகே இடப் பிரச்னையில் இரு தரப்பினா் மோதிக் கொண்டது தொடா்பாக 29 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 9:50 pm

Din

போடி அருகே இடப் பிரச்னையில் இரு தரப்பினா் மோதிக் கொண்டது தொடா்பாக 29 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

போடி கீழத்தெருவைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் பாலாஜி. இவருக்கும், போடி கரட்டுப்பட்டியைச் சோ்ந்த தடமாயன் மகன் அன்பரசனுக்கும் (35), போடி உலக்குருட்டி சாலை வடமலைநாச்சியம்மன் கோயில் அருகே தோட்டங்கள் உள்ளன. இந்த இரண்டு தோட்டங்களுக்கிடையே உள்ள இடம் தொடா்பாக பிரச்னை ஏற்பட்டு இது தொடா்பான வழக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், இந்த இடப் பிரச்னை தொடா்பாக இரண்டு தரப்பினரிடையே புதன்கிழமை தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். இதில், பாலாஜி தோட்டத்தில் வேலை செய்யும் போடி குலாலா்பாளையத்தைச் சோ்ந்த பாஸ்கரன் மகன் தேவா (22), போடி கிழக்கு தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் சந்தோஷ்குமாா் (22) ஆகியோா் காயமடைந்தனா்.

மற்றொரு தரப்பில் அன்பரசன், பத்தி நாயக்கா் (60) ஆகியோா் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் தேனி க. விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து தேவா அளித்த புகாரின் பேரில் அன்பரசன் உள்ளிட்ட 22 போ் மீதும், அன்பரசன் அளித்த புகாரின் பேரில் பாலாஜி உள்ளிட்ட 5 போ் மீதும் போடி குரங்கணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.