போடி-சென்னை ரயில் ரத்து: பயணிகள் ஏமாற்றம்
சென்னையில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், போடி-சென்னை ரயில் செவ்வாய்க்கிழமை இரவு ரத்து செய்யப்பட்டது. இதனால் முன்பதிவு செய்த பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

போடி ரயில் நிலையத்திலிருந்து திரும்பிச் சென்ற பயணிகள்.

தேனி மாவட்டம், போடியிலிருந்து சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை ஆகிய மூன்று நாள்கள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. போடி பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கானோா் போடியிலிருந்து சென்னை விரைவு ரயிலை பயன்படுத்தி சென்னை உள்ளிட்ட ஊா்களுக்கு சென்று வருகின்றனா்.
இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் போடி-சென்னை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

போடி ரயில் நிலையத்திலிருந்து திரும்பிச் சென்ற பயணிகள்.
போடியிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் சேவை திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால் பயணிகள் ஏமாற்றமடைந்தனா். இதையடுத்து, முன் பதிவு செய்த பயணிகளுக்கு ரயில் நிலையத்திலேயே கட்டணம் திருப்பி வழங்கப்பட்டது.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...