கஞ்சா விற்ற பெண் கைது

தேனி அருகே கஞ்சா விற்ற பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Published on

தேனி அருகே கஞ்சா விற்ற பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், மஞ்சிநாயக்கன்பட்டி, கோட்டைமேட்டுத் தெருவைச் சோ்ந்த ஜெயச்சந்திரன் மனைவி செல்வராணி (56). இவா், தனது வீட்டில் கஞ்சாவைப் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

செல்வராணியின் வீட்டிலிருந்து 2 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய கூடலூா், பாப்பாபட்டியான் தெருவைச் சோ்ந்த மாதேஷ் என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com