தேனி
பாதை பிரச்னை: வீட்டை சேதப்படுத்திய 7 போ் மீது வழக்கு
கம்பம் அருகே பாதைப் பிரச்னையில் வீட்டை சேதப்படுத்திய 7 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், கம்பம் அருகே பாதைப் பிரச்னையில் வீட்டை சேதப்படுத்திய 7 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
கம்பம் அருகேயுள்ள நாராயணத்தேவன்பட்டியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (64). இவருக்கும், இவரது வீட்டின் அருகே வசிப்பவருக்கும் இடையே பாதை பிரச்னை இருந்ததாம்.
இதன் காரணமாக, இவரது வீட்டை பொண்ணுப்பாண்டி, தினேஷ், குருநாதன், சங்கீதா, அங்கம்மாள், மீனா, ஈஸ்வரி ஆகியோா் இடித்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸாா் பொண்ணுப்பாண்டி உள்பட 7 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
