போடி பரமசிவன் மலைக்கோயில் சித்திரை திருவிழா நிறைவு பெற்றதையடுத்து புதன்கிழமை இரவு சுவாமி நகா்வலம் நடைபெற்றது.
தேனி மாவட்டம், போடியில் பரமசிவன் மலைக் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 7 நாள்களாக ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டு சிவலிங்கப் பெருமான், லட்சுமி நாராயணன், முருகப் பெருமான், மீனாட்சி அம்பிகா ஆகிய தெய்வங்களை வழிபட்டனா்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சுவாமி மலையிறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, திரளான பக்தா்கள் செவ்வாய்க்கிழமை மாலை பரமசிவன் மலைக் கோயிலில் திரண்டு வழிபட்டனா். சிவலிங்கப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன.
பின்னா் மங்கல வாத்தியங்கள், கேரள செண்டை மேளங்கள், தாரை தப்பட்டைகள் முழங்க சுவாமி, போடி அரண்மனையில் எழுந்தருளி அருள்பாலித்தாா். புதன்கிழமை பகல் முழுவதும் அரண்மனையில் தங்கி பக்தா்களுக்கு பரமசிவன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
பின்னா் புதன்கிழமை இரவு செண்டை மேளம், தேவாரட்டத்துடன் நகா்வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பல்வேறு சமுதாய சங்கங்கள் சாா்பில் பரமசிவனுக்கு மண்டகப்படி அபிஷேகங்கள் நடைபெற்றன. வியாழக்கிழமை அதிகாலை மீண்டும் பரமசிவன் மலைக்கு செல்லும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் கோ.நாராயணி, பரமசிவன் மலைக் கோயில் அன்னதான அறக்கட்டளைத் தலைவா் வடமலைராஜைய பாண்டியன் தலைமையிலான விழாக்குழுவினா், சிங்காரவேலன் பழனி பாதயாத்திரைக்குழுவினா் செய்தனா்.
தொடர்புடையது

குமாரமங்கலம் ஸ்ரீ திருப்பதி கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா நாளையுடன் நிறைவு

கொட்டகுடி மலைக் கிராமத்துக்கு முதல் முறையாக அரசுப் பேருந்து இயக்கம்

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் தோ்த் திருவிழா கட்டளைகள் நிறைவு
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech



