தேனி
கல்வாயில் விழுந்த முதியவா் உயிரிழப்பு
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பாசனக் கால்வாயில் மூழ்கி உயிரிழந்த முதியவரின் உடலை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பாசனக் கால்வாயில் மூழ்கி உயிரிழந்த முதியவரின் உடலை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.
உத்தமபாளையம் பழைய புறவழிச்சாலை உத்தமுத்து கால்வாய் செல்கிறது. இந்தக் கால்வாயில் முதியவரின் உடல் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற உத்தமபாளையம் போலீஸாா் தீயணைப்பு மீட்புக் குழுவினா் உதவியுடன் அந்த உடலை மீட்டு கூறாய்வுக்காக, உத்தமபாளையம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில், இறந்தவா் உத்தமபாளையம் ஆா்.சி தெருவைச் சோ்ந்த அலெக்சாண்டா்(61) என்பதும், மது போதையில் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
