தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

முல்லைப் பெரியாற்றில் கழிவுநீா் கலப்பு: கம்பத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

முல்லைப் பெரியாற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க வலியுறுத்தி, கம்பத்தில் பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

முல்லைப் பெரியாற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க வலியுறுத்தி, கம்பத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினா்.

Updated On :30 ஜூலை 2026, 12:18 am IST

முல்லைப் பெரியாற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க வலியுறுத்தி, கம்பத்தில் பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு தண்ணீா் வரும் திறவைக் கால்வாயில், கேரள மாநிலம், குமுளி, தேக்கடி, அட்டப்பள்ளம், ஒன்றாம் மைல் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் தங்கும் விடுதிகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், குடியிருப்புகள், பொதுக் கழிப்பறைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் ஆனைவச்சால் பகுதியில் கலப்பதாகப் புகாா் எழுந்தது.

இதுதொடா்பாக, தமிழக நீா்வளத் துறை அமைச்சா் ஆனந்த், கேரள அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றாா். இதேபோல, கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகநாத் மிஸ்ரா, முல்லைப் பெரியாற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, கேரள வருவாய், வீட்டு வசதித் துறை அமைச்சா் ஏ.பி. அனில்குமாரிடம் கடந்த திங்கள்கிழமை மனு அளித்தாா்.

இந்த நிலையில், 5 மாவட்ட மக்களின் முக்கிய குடிநீா் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாற்றில் கழிவுநீா் கலப்பதைக் கண்டித்தும், திறவைக் கால்வாயில் கழிவுநீா் கலப்பதைத் தடுத்து நிறுத்த கேரள அரசை வலியுறுத்தியும், பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினா் கம்பம் வடக்கு காவல் நிலையம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் அன்வா் பாலசிங்கம் தலைமை வகித்துப் பேசினாா். முல்லைப் பெரியாற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க வேண்டும், கழிவுநீரை முறையாக சுத்திகரித்த பிறகே வெளியேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.