கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா வித்யாலயாவிற்கு சி.பி.எஸ்.இ. அங்கீகாரம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர்-பிள்ளையார்குளத்தில் உள்ள சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளிக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

News image
Updated On :4 டிசம்பர் 2012, 4:24 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர்-பிள்ளையார்குளத்தில் உள்ள சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளிக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பள்ளிக்கு மத்திய அரசு வழங்கியதற்கும், மாநில அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கியதற்கும் பள்ளி நிர்வாகம் சார்பில் அரசிற்கும், அதிகாரிகளுக்கும் விழாவில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் செவ்வாய்கிழமை பள்ளியில் இது விழாவாக தாளாளர் சி.குமரேசன் தலைமையில் கொண்டாடப்பட்டு மாணவ மாணவியருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தொழிலதிபர் டைகர் கே.சம்சுதீன், பள்ளி ஆலோசகர் எஸ்.பாரதி, முதல்வர் பி.முருகதாசன், துணை முதல்வர் எஸ்.சத்தியமூர்த்தி மற்றும் ஏராளமான பெற்றோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய பெற்றோர் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் சி.பி.எஸ்.இ. பள்ளி இல்லாத நிலையில் பெற்றோர் மற்றும் மாணவர்களின் குறையைப் போக்க இந்தப் பள்ளி உள்ளது என்று தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஒருங்கிணைப்பாளர் அமுதா தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.