கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

தமிழ் அறிவுத் திருவிழா: ஸ்ரீவில்லிபுத்தூர் லயனஸ் பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன்

ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீவில்லிபுத்தூர், லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவ மாணவியருடன் முதல்வர் ஜி.எஸ்.ராஜேந்திரன், துணை முதல்வர் டி.முத்துக்குமார்.

News image
Updated On :7 டிசம்பர் 2012, 2:44 pm

கோ.ஜெயக்குமார்

திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடி, எஸ்.வீராச்சாமி செட்டியார் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, பள்ளி மாணவ மாணவியரிடம் கலை மற்றும் பொது அறிவுத் திறனை வெளிக்கொணருவம் வகையில் நடத்திய தமிழ் அறிவுத் திருவிழாவில் கலந்து கொண்ட 40 பள்ளிகளில் ஸ்ரீவில்லிபுத்தூர், லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி அதிக புள்ளிகளைப் பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

போட்டியில் திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 40 பள்ளிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவியர் பங்கேற்றர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர் கட்டுரைப் போட்டி, கிராமிய நடனம், சினிமா பாடல் நடனம் ஆகிய போட்டிகளில் முதலிடம் பெற்றனர். தனி நபர் நடனம், பாட்டுப் போட்டி ஆகிவற்றில் இரண்டாம் இடம் பெற்றனர்.

மேலும் கலந்து கொண்ட 40 பள்ளிகளின் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் அதற்கான கேடயத்தையும் ஸ்ரீவில்லிபுத்தூர், லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி பெற்றது.

வெற்றி பெற்ற மாணவ மாணவியரை பள்ளியின் செயலர் மற்றும் தாளாளர் எஸ்.ஆர்.முருகராஜன், தலைவர் எஸ்.குணசேகரன், பொருளாளர் எம்.கே.முகமது மைதீன், முதல்வர் ஜி.எஸ்.ராஜேந்திரன், துணை முதல்வர் டி.முத்துக்குமார், தலைமை ஆசிரியை ஜெ.ஜெயசீலி, அரிமா சங்கத் தலைவர் வி.ஆர்.நடராஜன், செயலாளர் ஆர்.முனியாண்டி, பொருளாளர் எல்.சாத்தப்பன் மற்றும் அரிமா சங்கத்தினர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.